எம்.ஆர்.கே., சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதலுக்கு பட்டுவாடா

கடலுார் : எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை செய்த கரும்புக்கு இன்று வங்கி மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படும் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவரது செய்திக்குறிப்பு:

எம்.ஆர்.கே., கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024--25 அரவைப் பருவம் 6.01.2025 அன்று துவங்கப்பட்டு 10.03.2025 வரை 884 விவசாயிகளிடமிருந்து 55821.871 மெட்ரிக் டன் கரும்பு பெறப்பட்டு அரவை செய்யப்பட்டது. கரும்பு கிரய நிலுவைத் தொகை 588 விவசாயிகளுக்கு வழங்க வேண்டியுள்ளது. இதற்கான தொகை 12.99 கோடி ரூபாய் ஆகும். வண்டி வாடகை நிலுவைத் தொகை 1.14. கோடி ரூபாய் ஆகும்.

இத்தொகையை தமிழக அரசு 14.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டு ஆலைக்கு பெறப்பட்டுள்ளது. கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு கிரயத்தொகை மற்றும் வாகன வாடகை தொகை 14.13 கோடி ரூபாய் இன்று (26ம் தேதி) விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement