சாலை பணியில் அலட்சியம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
அயோத்தியாப்பட்டணம்:அயோத்தியாப்பட்டணம் அடுத்த பெரியகவுண்டாபுரத்தில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில், மந்தைமேடு முதல் ஆலங்குட்டை வரை, 1 கி.மீ.,க்கு, பழங்குடியினர் நலத்துறை திட்டத்தில் தார்ச்-சாலை அமைக்கும் பணி, கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கப்-பட்டது. அதேபோல், 18 லட்சம் ரூபாய் மதிப்பில், பெரியகவுண்-டாபுரம் பஸ் ஸ்டாப் முதல் புது டேங்க் வரை, 400 மீட்டருக்கு பணி தொடங்கப்பட்டது. இதற்கு, 3 மாத ஒப்பந்தம் என விடப்-பட்ட நிலையில், பணி ஆரம்ப கட்டத்திலேயே உள்ளது.
குறிப்பாக, ஒரு மாதத்துக்கு முன் அப்பகுதியில் வெறும் ஜல்-லிக்கற்களை மட்டும் கொட்டி சென்றனர். இதுவரை சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஜல்லி கற்களில், வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் தடுமாறு-கின்றனர். பாதசாரிகளும் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்-றனர். குறிப்பாக இரவில் செல்வோர் விபத்துக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் தெரிவித்தும், தார்ச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றம்சாட்-டினர்.
மேலும்
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்