மக்காச்சோளம் பயிரிட ஆர்வம்

தற்போது வைகாசி பட்டம் துவங்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திற்கு தென்மேற்கு பருவ மழை கை கொடுக்காவிட்டாலும் பி.ஏ.பி., பாசனம் நடக்கும் பகுதிகளில் நீர்வளம் நிரம்பி உள்ளது. வைகாசி பட்டத்தில் சாகுபடி செய்யும் மக்காச்சோளம் புரட்டாசி மாதத்தில் அறுவடைக்கு வரும்.

அப்போது வட மாநிலங்களில் அறுவடை சீசன் இருக்காது என்பதால் மக்காச்சோளத்துக்கு கிராக்கி நிலவுவது வழக்கம். சீசனில் சாகுபடி செய்யும் மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்கும் என்பதால் விவசாயிகள் மக்காச்சோள சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

Advertisement