பெண்கள் தற்கொலை

தாராபுரம் : தாராபுரம், கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 58. உடல் நலம் பாதிக்கப்பட்டு, கடந்த, ஐந்து ஆண்டுகளாக சிகிச்சை பெற்று வந்தார். மனவேதனை அடைந்த அவர் 22ம் தேதி விவசாயத்துக்கு பயன்படுத்த கூடிய களைக்கொல்லி மருந்தை குடித்தார். சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தாராபுரம், தளவாய்பட்டினத்தை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 52. கடந்த, மூன்று ஆண்டுகளுக்கு முன், வாகன விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று காலை கணவர் வேலைக்கு சென்ற நிலையில், வீட்டில் இருந்து முத்துலட்சுமி துாக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார். அலங்கியம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement