வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா

கடலுார் : வடலுார் சத்திய தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா சிறப்பு வழிபாடுகள் நடந்தது.
கடலுார் மாவட்டம், வடலுாரில், 1867ம் ஆண்டு, சத்திய தருமச்சாலையை ராமலிங்க அடிகளார் நிறுவினார். அன்றைய தினம் அவர் ஏற்றி வைத்த அணையா அடுப்பு தொடர்ந்து எரிந்து வருகிறது. அன்று முதல் தருமச்சாலையில் தினசரி 3 வேளை அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படுகிறது.
தருமசாலை 159ம் ஆண்டு துவக்க விழாவையொட்டி கடந்த வாரம் முழுதும் அருட்பெருஞ்ஜோதி மகாமந்திரம் மற்றும் திருஅருட்பா, முற்றோதல் நடந்தது. தருமச்சாலையில் நேற்று அதிகாலை 5:00 மணிக்கு அகவல் பாராயணம் பாடப்பட்டது. தொடர்ந்து 7.30 மணிக்கு சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டது.
ஏராளமான சன்மார்க்க அன்பர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அதனைத் தொடர்ந்து, தருமசாலையின் சிறப்பு அம்சங்கள் குறித்தும், வள்ளலாரின் வரலாறு குறித்தும் வில்லுப்பாட்டு, இசை நிகழ்ச்சியும், ஜீவகாருண்ய ஒழுக்கம், சொற்பொழிவு, திருஅருட்பா இன்னிசை நடந்தது.
ஏற்பாடுகளை ஹிந்து சமய அறுநிலையத்துறை அதிகாரிகள், அறங்காவலர் குழுவினர் செய்திருந்தனர்.
சீர்காழி சிவசிதம்பரம், மழையூர் சதாசிவம் ஆகியோர் கச்சேரி நிகழ்த்தினர். முன்னதாக தஞ்சை கலை பண்பாட்டு துறை சார்பில், சிறுவர், சிறுமியர் பங்கேற்ற கணபதி ஸ்துதி பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கியது.
இரண்டாம் நாளான இன்று நகைச்சுவை பேச்சாளர் ராமலிங்கம் சொற்பொழிவு நிகழ்த்துகிறார். நாளை வரை இசை விழா நடக்கிறது.
மேலும்
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்