வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு; ஒரு சவரன் ரூ.71,640!


சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,640க்கு விற்பனை ஆகிறது.


தமிழகத்தில் கடந்த சனிக்கிழமை (ஜூன் 07) தங்கம் விலை கிராமுக்கு 150 ரூபாய் குறைந்து, 8,980 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு 1,200 ரூபாய் சரிவடைந்து, 71,840 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (ஜூன் 08) விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை.

இந்நிலையில், இன்று (ஜூன் 09) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, ஒரு சவரன் ரூ.71,640க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,955க்கு விற்பனை செய்யப்படுகிறது.



வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement