காஞ்சி சங்கராச்சாரியார் பிறந்த நட்சத்திர பூஜை

புதுச்சேரி; தர்ம சம்ரக் ஷன சமிதி சார்பில், காஞ்சி சங்கராச்சாரியார் பிறந்த நட்சத்திரத்தை கொண்டாடும் வகையில், கோவில் அனுஷ பூஜை செய்யப்பட்டது.
புதுச்சேரி பக்தர்களின் ஆன்மிக உணர்வை மேம்படுத்தவும், இந்து மத சம்பிரதாயங்களை மக்கள் ஆழமாக மனதில் பதிவு செய்வதற்கும், தர்ம சம்ரக் ஷன சமிதி பல்வேறு முயற்சிகள் எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, காஞ்சி சங்கராச்சாரியாரின் பிறந்த அனுஷ நட்சத்திரத்தை, கொண்டாடும் வகையில், நேற்று குறிஞ்சி நகர் விநாயகர் கோவிலில், அனுஷ பூஜை நடந்தது.
தொடர்ந்து, ஏகாதச ருத்ரம் எனப்படும் ருத்ர பாராயணம், லலிதா சகஸ்ரநாம பாராயணம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தர்ம சம்ரக் ஷன சமிதி சார்பில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
விமான விபத்து: பிரிட்டன் பிரதமர் அதிர்ச்சி
-
மருத்துவ கல்லூரி விடுதி மீது விழுந்த விமானம்- மாணவர்கள் உயிரிழப்பு: வேதனை காட்சிகள்
-
சர்வதேச சட்டவிரோத நெட்வொர்க்கான “பாஸ் ஐபிடிவி” மீது வழக்கு தொடுத்த யூப்டிவி
-
விமானத்தில் பயணித்தவர்கள் யார்!
-
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி: பிரதமர் உத்தரவு
-
விபத்தின் போது நடந்தது என்ன: டி.ஜி.சி.ஏ., விளக்கம்
Advertisement
Advertisement