ஜூனியர் ஹாக்கி: இந்தியா அபாரம்

ஆன்ட்வெர்ப்: ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி, ஆஸ்திரேலியாவை வென்றது.
சிலியில், வரும் டிச. 1---13ல் ஜூனியர் பெண்களுக்கான உலக கோப்பை ஹாக்கி 11வது சீசன் நடக்கவுள்ளது. மொத்தம் 24 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி, 'சி' பிரிவில் ஜெர்மனி, அயர்லாந்து, நமீபியா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது. இதற்கு தயாராகும் விதமாக பெல்ஜியம் சென்றுள்ள ஜூனியர் இந்திய பெண்கள் அணி, பெல்ஜியம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து அணிகளுடன் 5 போட்டிகளில் விளையாடுகிறது.
பெல்ஜியத்துக்கு எதிரான 3 போட்டியிலும் வென்ற இந்தியா, 4வது போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. நந்தினி (8வது நிமிடம்), துணை கேப்டன் ஹினா பானோ (14வது) தலா ஒரு கோல் அடித்தனர். ஆஸ்திரேலியா சார்பில் ஜோசி லாடன் (5வது நிமிடம்) ஒரு கோல் அடித்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement