மானவ்-மானுஷ் 2வது இடம்: கன்டென்டர் டேபிள் டென்னிசில்

ஸ்கோப்ஜே: டபிள்யு.டி.டி., கன்டென்டர் டேபிள் டென்னிஸ் பைனலில் ஏமாற்றிய இந்தியாவின் மானவ், மானுஷ் ஜோடி 2வது இடம் பிடித்தது.
வடக்கு மாசிடோனியாவில், உலக டேபிள் டென்னிஸ் (டபிள்யு.டி.டி.,) கன்டென்டர் தொடர் நடந்தது. இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் மானவ் தாக்கர், மானுஷ் ஷா ஜோடி, தென் கொரியாவின் ஜோங்ஹூன் லிம், ஜுன்சங் ஓ ஜோடியை சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய ஜோடி 0-3 (9-11, 7-11, 9-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
முதன்முறையாக கன்டென்டர் தொடரின் பைனலுக்கு முன்னேறிய குஜராத்தை சேர்ந்த மானவ், மானுஷ் ஜோடி 2வது இடத்துடன் ஆறுதல் அடைந்தது.

Advertisement