180 ரன்னில் சுருண்டது ஆஸி.,

பிரிட்ஜ்டவுன்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு சுருண்டது.
வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி 3 டெஸ்டில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பிரிட்ஜ்டவுனில் நடக்கிறது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது.
ஆஸ்திரேலிய அணிக்கு கவாஜா (47), டிராவிஸ் ஹெட் (59) மட்டும் கைகொடுத்தனர். கேப்டன் கம்மின்ஸ் 28 ரன் எடுத்தார். கேமரான் கிரின் (3), இங்லிஸ் (5), கேரி (8) ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 180 ரன்னுக்கு சுருண்டது. வெஸ்ட் இண்டீசின் ஜேடன் சீலஸ் 5, ஷமர் ஜோசப் 4 விக்கெட் சாய்த்தனர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் 57/4 ரன் எடுத்து, 123 ரன் பின்தங்கி இருந்தது. பிரண்டன் கிங் (23), கேப்டன் ராஸ்டன் சேஸ் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. பிரண்டன் கிங் 26 ரன்னில் அவுட்டானார். ராஸ்டன் சேஸ் (44), ஷாய் ஹோப் இணைந்து நம்பிக்கை தந்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 162/7 ரன் எடுத்து 12 ரன் பின்தங்கி இருந்தது. ஹோப் (48) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசல்வுட் தலா 2 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement