ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தொழில் கூட்டமைப்பு வலியுறுத்தல்

துாத்துக்குடி: 'பசுமை முறையில் காப்பர் உற்பத்தி செய்யும் வகையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கலெக்டரிடம் தொழில் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.

துாத்துக்குடி மக்கள் வாழ்வாதார இயக்க தலைவர் தியாகராஜன், செயலர் கணேசன் தலைமையில், தொழில் கூட்டமைப்பினர் நேற்று அளித்த மனு:

துாத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை பசுமை முறையில் மீண்டும் துவக்க, சுற்றுச்சூழலுக்காக விருது பெற்ற பேராசிரியர் கணபதி மற்றும் ஓய்வுபெற்ற சுற்றுச்சூழல் பேராசிரியர் டாக்டர் நாகேந்திரன் ஆகியோர் பரிந்துரை செய்துள்ளனர்.

அந்த அறிக்கையில் ஸ்டெர்லைட் ஆலையை பசுமை அடிப்படையில் நவீன விஞ்ஞான முறையில் ஆலை கழிவுகளால் நீர், நிலம், காற்று ஆகியவை மாசு ஏற்படாத வகையில், கருவிகளை மாற்றி அமைத்து திறப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பரிந்துரை செய்துள்ளனர்.

துாத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு தற்போது விஞ்ஞான அடிப்படையிலான தீர்வு கிடைத்துள்ளது.

அதை ஏற்று, ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு, தொழிலாளர்களின் வேலை இழப்பு, காப்பர் உற்பத்தி பாதிப்பு ஆகியவற்றை கருதி, உடனடியாக ஆலையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.

Advertisement