தம்பியின் தொடர்பு விவகாரம் அண்ணனை கொன்றோர் கைது

சாத்துார்: சாத்துார் அருகே தம்பி காதல் பிரச்னையில் அண்ணனை, வெட்டி கொலை செய்த மூவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்துார் ஒத்தையாலைச் சேர்ந்தவர் சங்கேஸ்வரன். பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, அவரை சிலர் வெட்டிக்கொலை செய்தனர்.
கொலை குறித்து போலீசார் கூறியதாவது:
சங்கேஸ்வரனின் சித்தப்பா மகன் சிங்கீஸ்வரன், 18. பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்ததாக கூறப்படுகிறது.
சிறுமி ஏற்கனவே கோவில்பட்டி விஜயபாண்டி என்பவருடன் பழகியதாக தெரிகிறது. எனவே அவர், சிறுமியுடன் பேசக்கூடாது என சிங்கீஸ்வரனை எச்சரித்தார். அவர் தன் அண்ணன் சங்கேஸ்வரனிடம் கூறினார்.
சங்கேஸ்வரன், விஜயபாண்டியுடன் சமரசம் பேசுவதற்காக, தான் பணிபுரியும் பட்டாசு ஆலைக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு, நேற்று முன்தினம் மாலை வரவழைத்தார்.
அப்போது ஏற்பட்ட தகராறில், விஜயபாண்டி, அவரது நண்பர்கள் ராஜபாண்டி, மகேஸ்வரன், அபி, 20, பரணி, 21, ஆகியோர், சங்கேஸ்வரனை ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தனர்.
அவர்களில் மூன்று பேரை கைது செய்துள்ளோம். தலைமறைவாக உள்ள அபி, பரணியை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
-
திருமலா பால் நிறுவன அதிகாரி சந்தேக மரணம்; துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை
-
ஜம்முவில் 50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படைகள்
-
தாறுமாறாக வேனை ஓட்டிய கிளீனர் காவலாளி, டிரைவர் சிக்கி பரிதாப பலி