சிறுமியை ஏமாற்றி திருமணம் செய்த கூலி தொழிலாளி கைது

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி தம்பதிக்கு, 10ம் வகுப்பு படித்து கொண்டிருந்த, 16 வயது மகள் உள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன், மாணவியை காணவில்லை. பதறிய பெற்றோர், ஊட்டி ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார், விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், நஞ்சநாடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி, ராஜன், 35, என்பவர் ஆசை வார்த்தை கூறி, ஏமாற்றி சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது. சிறுமிக்கு தாலி கட்டி திருமணம் செய்து நஞ்சநாடு அழைத்து வந்தார்.
போலீசார் ராஜனிடம் விசாரணை நடத்தினர். அதில், ராஜாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக, அவரின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் பிரிந்து சென்று விட்டார் என்பது தெரிந்தது.
தொடர்ந்து, போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், ராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
சீர்திருத்த நடவடிக்கையில் டிரம்ப் வேகம்: ஒரே நாளில் 1300 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்
-
காசா உதவி மையங்களில் இதுவரை பாலஸ்தீனர்கள் 800 பேர் கொலை; ஐ.நா., அதிர்ச்சி தகவல்
-
இந்திய வான்வெளி பாதுகாப்பில் புதிய மைல்கல்: அஸ்தரா ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
-
திருமலா பால் நிறுவன அதிகாரி சந்தேக மரணம்; துணை கமிஷனர் பாண்டியராஜனிடம் விசாரணை
-
ஜம்முவில் 50 பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்: சல்லடை போட்டு தேடும் பாதுகாப்பு படைகள்
-
தாறுமாறாக வேனை ஓட்டிய கிளீனர் காவலாளி, டிரைவர் சிக்கி பரிதாப பலி