முதலாண்டு மாணவர்களுக்கு ஒரு வாரம் அறிமுகப்பயிற்சி

அவிநாசி; அவிநாசி அரசு கலைக்கல்லுாரியில், முதலாமாண்டு மாணவர்களுக்கு ஒரு வார கால அறிமுக பயிற்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) ஹேமலதா தலைமை வகித்தார். துறை தலைவர்கள் ஷகிலா பானு, மணிவண்ணன், முகுந்தன், பாலமுருகன், மணிகண்டன், தாரணி, நுாலகர் லுாயிஸ் ஆகியோர் மாணவர்களுக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேசினர்.

கோவை பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி உளவியல் பேராசிரியர் பாலகிருஷ்ணமூர்த்தி மாணவர்களுக்கு உளவியல் சார்ந்த மனநலம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.

வணிக நிர்வாகத்துறை தலைவர் அருண் வேலை வாய்ப்பு மற்றும் தொழில் துறை எதிர்பார்ப்புகள் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பேசினார்.

கல்லுாரி நன்கொடையாளர் நாச்சிமுத்து மற்றும் அலுவலக ஊழியர்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்கள் பற்றியும் அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினர்.

எஸ்.இ.டி.ஓ., அமைப்பின் நிர்வாக உறுப்பினர் பாண்டிச்செல்வி மற்றும் சிறுவர் நலக்குழு உறுப்பினர் ஆறுச்சாமி ஆகியோர் இணைய குற்றங்கள், பாலினம் சார்ந்த புகார் கமிட்டி குறித்து மாணவர்களுக்கு தகவல்களை வழங்கினர்.

Advertisement