கல்லுாரி சந்தையில் மாணவியர் ஆர்வம்

திருப்பூர்; திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், மகளிர் திட்டம் சார்பில் கல்லுாரி சந்தை நடந்தது.

மகளிர் சுய உதவிக்குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட மகளிர் திட்டம் சார்பில், திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், கல்லுாரி சந்தை நடத்தப்பட்டது. இதில், மகளிர் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்பு பொருட்களான மண்பானை வகை பொருட்கள், மரப்பொம்மைகள், கீ செயின் வகைகள், சணல் பை வகைகள், உணவு பொருட்கள், தின்பண்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. கல்லுாரி மாணவியர் ஆர்வமுடன் பார்வையிட்டு, அவற்றை வாங்கினர்.

Advertisement