தொழில்நுட்ப கோளாறு ; ஸ்பைஸ் ஜெட் விமானம் ரத்து; அமர்நாத் பக்தர்கள் போராட்டம்

2

புதுடில்லி: ஸ்ரீநகரில் இருந்து டில்லி செல்லவிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக திடீரென ரத்து செய்யப்பட்டது. இதனால், கோபமடைந்த அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கும், விமான நிலைய ஊழியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.



நேற்றிரவு இரவு 8.30 மணிக்கு ஸ்ரீநகரில் இருந்து டில்லி நோக்கி புறப்பட இருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால், அமர்நாத் யாத்திரை பக்தர்கள் உள்பட பயணிகளுக்கும், விமான நிறுவன ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவன ஊழியர்கள் மீது ஸ்ரீநகர் விமான நிலைய அதிகாரிகளிடம் பயணிகள் புகார் அளித்தனர்.

இதையடுத்து, பயணிகளுக்கு விமான நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் தங்கும் வசதி செய்து கொடுக்கப்பட்டது. மேலும், தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்ட பிறகு, மீண்டும் இன்று இரவு 11.30 மணிக்கு அந்த விமானம் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த விமானத்தில் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement