சாலை நடுவே கம்பத்தை அகற்ற வலியுறுத்தல்

ஆலந்துார் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட கவுல்பஜார் ஊராட்சியில், வி.ஜி.என்., - 1 குடியிருப்புக்கு செல்லும் சாலையின் நடுவில், மின்கம்பம் ஒன்று உள்ளது.

அதிக வாகனங்கள் பயன்படுத்தும் இந்த சாலையின் நடுவில் உள்ள மின் கம்பத்தால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்றனர். அவ்வப்போது நெரிசலும் ஏற்படுகிறது.

மேலும், நடுவில் உள்ள கம்பத்தால், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களை திருப்ப முடியவில்லை. பொதுமக்கள் மற்றும் வாகனங்களுக்கு இடையூறாக உள்ள கம்பத்தை அகற்றுமாறு பலமுறை கோரிக்கை விடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். பல ஆண்டுகளாக நிலவும் இப்பிரச்னைக்கு, இனியாவது தீர்வு கிடைக்குமா?

- ராஜேஷ்,

கவுல்பஜார்.

Advertisement