இயற்கை உர பயன்பாடு விழிப்புணர்வு பயிற்சி

விருத்தாசலம்: விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில் இயற்கை உர பயன்பாடு குறித்து விழிப்புணர்வு பயிற்சி நடந்தது.

மங்களூர் வட்டாரம், ஆவட்டி கிராமத்தில் வேளாண் அறிவியல் நிலையம் மற்றும் மெட்ராஸ் உர நிறுவனம் சார்பில் நடந்த பயிற்சியை, திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் துவக்கி வைத்தார். வட்டார மேலாளர் துளசிலிங்கம் உரங்கள் பயன்பாடு, நீரில் கரையும் உரங்கள், கம்போஸ்ட், சிட்டி கம்போஸ்ட் உள்ளிட்ட இயற்கை உரங்கள் குறித்து பேசினார்.

மேலும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகம் சார்பில் நீரில் கரையும் உரம், உயிர் உரங்கள் பயன்படுத்தும் முறைகள், அங்கக எரு, வேர் உட்பூசணம் பயன்படுத்தும் முறைகள், உரங்கள் பயன்படுத்தும் விதம், எவ்வாறு மண்ணில் அளிப்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் தரப்பட்டது. உதவி பேராசிரியர் காயத்ரி இயற்கை சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பேசினார்.


வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானிகள், உர நிறுவன அலுவலர்கள், ஆவட்டி கிராம முன்னோடி விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement