கடலுார் விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்புத்துறை 13 பேருக்கு நோட்டீஸ்  

கடலுார்: கடலுார் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் நடந்த விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் 13 பேருக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடலுார் அருகே செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் பாசஞ்சர் ரயில் பள்ளி வேன் மீது மோதியதில் 3 மாணவர்கள் பலியாகினர். படுகாயடைந்த 10ம் வகுப்பு விஸ்வேஸ் என்கிற மாணவர் கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார். இந்த வழக்குத்தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தென்னக ரயில்வே திருச்சி கோட்டத்தில் இருந்து விபத்து தொடர்பாக ரயில்வே நிர்வாகம் 13 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கேட் கீப்பர் பங்கஞ்சர்மா, சக்திகுமார், ரஞ்ஜீத் மீனா, விக்ராந்த் சிங் உள்ளிட்ட 13 பேருக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் வழங்கியுள்ளது. இவர்கள் அனைவரும் 9ம் தேதி இன்று காலை 9.30மணிக்கு டிவிஷனல் சேப்டி ஆபீசர் மகேஷ்குமார் முன்பு ஆஜாராகி விளக்கம் தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement