ஓடும் பஸ்சில் நெஞ்சு வலி ஏற்பட்டு டிரைவர் பலி: உயிர் தப்பிய 60 பயணிகள்

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் இருந்து சென்று கொண்டிருந்த அரசு பஸ் டிரைவருக்கு நடுவழியில் நெஞ்சு வலி ஏற்பட்டது. அவரது கட்டுப்பாட்டை இழந்த பஸ் ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் டிரைவர் உயிரிழந்தார்.
பயணிகள் உயிர்தப்பினர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஸ்டாண்டிலிருந்து செம்மறிகுளத்திற்கு அரசு நகர பஸ் பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று( ஜூலை 16) இரவு7:00 மணிக்கு புறப்பட்டது. பஸ்சை குலசேகரன்பட்டணம் வடக்கூரை சேர்ந் ஜெயசிங் மகன் அல்டாப் (48) ஓட்டினார்.
திருச்செந்தூர் அரசு மருத்துவமனையை தாண்டி அரசு பஸ் வரும் போது டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால், பஸ் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இடது ஓரமாக சென்று தனியார் மண்டபம் முன்பிருந்த மின்கம்பத்தில் மோதியது. அப்போது ரோட்டோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த பைக் மீதும், அந்த வழியாக நடந்து சென்ற வட மாநிலத் தொழிலாளர் தினேஷ் என்பவர் மீதும் அரசு பஸ் மோதியது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அரசு பஸ் டிரைவர், வட மாநில தொழிலாளியையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது டிரைவரை பரிசோதித்த டாக்டர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பஸ்சில் இருந்து 60 மேற்பட்ட பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
தினேஷூக்கு தோள் மற்றும் இரண்டு காதுகளிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த டிரைவர் அல்டாப்புக்கு ஜெனட் என்ற மனைவியும் ஜெனி, ஜெரினா என இரண்டு மகள்கள் உள்ளனர். மின்கம்பத்தில் மோதியதை தொடர்ந்து அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்வாரியத்தினர் விரைந்து வந்து ஜேசிபி உதவியுடன் உடன் பஸ்சை அகற்றி மின் வழித்தடத்தை சீரமைத்தனர். அரசு பஸ்சை ஓட்டிய டிரைவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.








மேலும்
-
ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டி; மீண்டும் கார்ல்சனை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு : அன்புமணியின் சொந்த கருத்து என்கிறார் ராமதாஸ்
-
பெண்கள் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தானா - பிரதிகா ராவத் ஜோடி புதிய உலக சாதனை!
-
செஞ்சியை சிவாஜி கோட்டையாக அங்கீகரிப்பது கொடுஞ்செயல்: ராமதாஸ் கண்டனம்
-
மாயமான நபர் காரில் சடலமாக மீட்பு
-
கோவையில் சந்தேகத்துக்குரிய 40 நபர்களின் சமூக வலைதளங்களை முடக்கியது போலீஸ்