வரலாறு படைத்தது வங்கதேசம்: 'டி-20' தொடரை கைப்பற்றியது

கொழும்பு: மூன்றாவது 'டி-20' போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, இலங்கை மண்ணில் முதன்முறையாக 'டி-20' தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது.

இலங்கை சென்ற வங்கதேச அணி, மூன்று போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்து. கொழும்புவில் 3வது போட்டி நடந்தது.
'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு குசால் மெண்டிஸ் (6), குசால் பெரேரா (0), தினேஷ் சண்டிமால் (4), கேப்டன் சரித் அசலங்கா (3) ஏமாற்றினர். பதும் நிசங்கா (46), கமிந்து மெண்டிஸ் (21), தசுன் ஷனகா (35*) கைகொடுத்தனர். இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 132 ரன் எடுத்து. வங்கதேசம் சார்பில் மஹெதி ஹசன் 4 விக்கெட் சாய்த்தார்.


எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு கேப்டன் லிட்டன் தாஸ் (32) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய தன்ஜித் ஹசன் அரைசதம் விளாசினார். வங்கதேச அணி 16.3 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 133 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தன்ஜித் ஹசன் (73), தவ்ஹித் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.

வங்கதேச அணி 2-1 என தொடரை கைப்பற்றி, கோப்பை வென்றது. ஆட்ட நாயகன் விருதை வங்கதேசத்தின் மஹெதி ஹசன் வென்றார். தொடர் நாயகன் விருதை வங்கதேசத்தின் லிட்டன் தாஸ் (114 ரன்) கைப்பற்றினார்.

Advertisement