சுரேஷ் கோபி படத்துக்கு சென்சார் சான்று கிடைத்தது

கொச்சி: ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா படத்துக்கு சென்சார் வாரியம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து படம் நாளை வெளியாகும் என மத்திய அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.
மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில், பிரவின் நாராயணன் இயக்கத்தில் வெளியாகும் படத்துக்கு ஜானகி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என பெயரிடப்பட்டுஇருந்தது. இது கடவுள் சீதையின் மறு பெயர் என்பதால் படத்துக்கு ஒப்புதல் அளிக்க மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மறுப்பு தெரிவித்தது.
இதை எதிர்த்து அந்த படத் தயாரிப்பு நிறுவனம், கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி தலைப்பை மாற்ற கோரினார். ஆனால், பட வெளியீட்டுக்கு குறைவான நாட்கள் இருப்பதால் மாற்ற முடியாது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.
இந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி ஜே.எஸ்.கே., - ஜானகி வி வெர்சஸ் ஸ்டேட் ஆப் கேரளா என படத்தலைப்பு மாற்றப்பட்டது. மேலும் ஜானகி என்ற வார்த்தை வரும் இடங்களில் சத்தம் இல்லாதபடி, 'மியூட்' செய்யவும் உத்தரவிடப்பட்டது.
இதன்படி தலைப்பு மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்யப்பட்டதை அடுத்து இந்த திரைப்படத்துக்கு ஜூலை 11ல் தணிக்கை வாரியம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. நாளைய தினம் இத்திரைப்படம் வெளியாகும் என மத்திய அமைச்சரும், படத்தின் நாயகனுமான சுரேஷ் கோபி தெரிவித்தார்.
மேலும்
-
ப்ரீஸ்டைல் கிராண்ட்ஸ்லாம் செஸ் போட்டி; மீண்டும் கார்ல்சனை தோற்கடித்தார் பிரக்ஞானந்தா
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு : அன்புமணியின் சொந்த கருத்து என்கிறார் ராமதாஸ்
-
பெண்கள் கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தானா - பிரதிகா ராவத் ஜோடி புதிய உலக சாதனை!
-
செஞ்சியை சிவாஜி கோட்டையாக அங்கீகரிப்பது கொடுஞ்செயல்: ராமதாஸ் கண்டனம்
-
மாயமான நபர் காரில் சடலமாக மீட்பு
-
கோவையில் சந்தேகத்துக்குரிய 40 நபர்களின் சமூக வலைதளங்களை முடக்கியது போலீஸ்