இந்திய மருத்துவத்திற்கு நிதி ஒதுக்ககோரிய வழக்கு தள்ளுபடி

மதுரை: இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தை பாதுகாக்க போதிய நிதி ஒதுக்க அரசுக்கு உத்தரவிட தாக்கலான வழக்கை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

மதுரை முருகேசன் தாக்கல் செய்த மனுவில்,சித்த மருத்துவம் உள்பட இந்திய மருத்துவ முறைகள் மற்றும் ஓமியோபதி மருத்துவத்தை பாதுகாக்க போதிய நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு பிறப்பித்த உத்தரவு: நீதித்துறையின் மறு ஆய்வு அதிகாரங்களை பயன்படுத்தி மனுவில் கோரியுள்ளபடி இந்திய மருத்துவ முறைகளுக்கு அதிக நிதி ஒதுக்க நீதிமன்றம் உத்தரவிட முடியாது. நிதி ஒதுக்கீடு என்பது அரசு எடுக்க வேண்டிய கொள்கை முடிவு. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது, என உத்தரவிட்டனர்.

Advertisement