அமெரிக்க டாலரின் ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி; பிரிக்ஸ் அமைப்பு மீது டிரம்ப் குற்றச்சாட்டு

வாஷிங்டன்: ''பிரிக்ஸ் அமைப்பு அமெரிக்க டாலரின் உலகளாவிய ஆதிக்கத்தை குறைத்து மதிப்பிட முயற்சி செய்கிறது'' என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
பொருளாதார சவால்
எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பினர் டாலரை கைப்பற்ற முயற்சி செய்கின்றனர். எங்களுடன் விளையாட யாரையும் நாங்கள் ஒரு போதும் அனுமதிக்க முடியாது. பிரிக்ஸ் அமைப்பிற்கு ஒரு கடுமையான பொருளாதார சவாலை எதிர்க்கொள்ளும் ஒற்றுமை இல்லை. நாங்கள் நிறைய போர்களை நிறுத்தினோம். இந்தியாவும், பாகிஸ்தானும் தீவிரமாக மோதிக் கொண்டிருந்தன.
அணுசக்தித் திறன்
இவை இரண்டு தீவிர அணு ஆயுத நாடுகள், அவை ஒன்றையொன்று மோதிக் கொண்டிருந்தன. சமீபத்தில் ஈரானில் நாம் என்ன செய்தோம் என்பதைப் பார்த்தபோது, அவர்களின் அணுசக்தித் திறனை நாங்கள் தகர்த்து, அதை முற்றிலுமாகத் தகர்த்துவிட்டோம்.
ஆனால் இந்தியாவும், பாகிஸ்தானும் அதை நோக்கிச் சென்று கொண்டிருந்தன. அது பெரிதாகிக் கொண்டே இருந்தது. வர்த்தகத்தின் மூலம் அதைத் தீர்த்து வைத்தோம். இவ்வாறு அவர் கூறினார்.




மேலும்
-
விளம்பர ஷூட்டிங்கில் நடிக்கச் சென்று விடுகிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்; அண்ணாமலை விமர்சனம்
-
தி.மு.க. அரசின் அலட்சியப் போக்குதான் மிகப்பெரிய வன்கொடுமை: சீமான்
-
சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவான கொள்கை இல்லை: ராகுல்
-
புறப்பட்ட 16 நிமிடங்களிலேயே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறக்கம்: பயணிகள் அவதி
-
இன்றும் அ.தி.மு.க., தான் குறி; இ.பி.எஸ்., தானாக பேசவில்லை என்கிறார் திருமா
-
விசாரணை நடத்தாமல் டி.எஸ்.பி.,யை சஸ்பெண்ட் செய்ய பரிந்துரையா: ஏற்க முடியாது என்கிறார் அண்ணாமலை