ஜூலை 23ம் தேதி பிரிட்டன் செல்கிறார் மோடி; வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு

புதுடில்லி: ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி பிரிட்டன் செல்கிறார். இரு நாடுகள் இடையே முக்கியமான வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
பிரிட்டன் மற்றும் மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். டில்லியில் இருந்து ஜூலை 23ம் தேதி பிரதமர் மோடி புறப்படுகிறார். முதலில், பிரிட்டன் சென்று, அங்கு ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார்.
இந்த ஒப்பந்தம், இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு கார்கள் ஏற்றுமதிகளை எளிதாக்கும். பிரிட்டன் பயணத்தை முடித்து விட்டு, பிரதமர் ஜூலை 25, 26ம் தேதிகளில் மாலத்தீவுக்குப் பயணம் மேற்கொள்வார். அங்கு அவர் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வார்.
பிரதமர் மோடியின் பயணம் இந்தியா-மாலத்தீவு ஆகிய இருநாடுகளுக்கு இடையே உறவுகளை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாலத்தீவு அதிபர் உள்ளிட்ட தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உறவை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடக்க உள்ளது.





