கனமழை எச்சரிக்கையால் நடவடிக்கை: ஊட்டியில் சுற்றுலா மையங்கள் மூடல்

ஊட்டி: கனமழை எச்சரிக்கையை அடுத்து, ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.



இன்றும், நாளையும்,கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் அறியப்பட்டது.


இந் நிலையில், கோவையின் புறநகர் பகுதிகளில் இன்று (ஜூலை 19) திடீரென மழை கொட்டியது. நீலகிரி மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்தது.


நீலகிரியில் இன்றும் நாளையும் ஆரஞ்சு எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து, உதகையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.


அவலாஞ்சி, பைன் மரக்காடு, 8வது மைல்கல், மரவியல் பூங்கா ஆகிய சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளன.

Advertisement