சிறுதொழில் முனைவோருக்கு ஆதரவான கொள்கை இல்லை: ராகுல்

10

புதுடில்லி: '' இந்தியாவில் சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்யவே விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்தியாவில் தயாரிக்கப்படும் பெரும்பாலான டிவிக்களின் 80 சதவீத உதிரிபாகங்கள் சீனாவில் இருந்து தான் வருகின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மேக் இன் இந்தியா என்ற பெயரில், நாம் வெறும் பொருட்களை பொருத்த தான் செய்கிறோம். உண்மையில் தயாரிக்கப்படவில்லை. ஐபோன்கள் முதல் டிவிக்கள் வரை, பாகங்கள் வெளிநாட்டில் இருந்து தான் வருகின்றன. நாம் அவற்றை ஒன்றாக இணைக்கிறோம்.


சிறு தொழில்முனைவோர் உற்பத்தி செய்ய விரும்புகிறார்கள். ஆனால், அவர்களுக்கு ஆதரவான கொள்கை இல்லை. மாறாக, கடுமையான வரிகளும், நாட்டின் தொழில்துறையை கைப்பற்றிய குறிப்பிட்ட கார்ப்பரேட் நிறுவனங்களின் ஏகபோகமும் மட்டுமே உள்ளது.
உற்பத்தியில் தன்னிறைவு பெறும் வரை, வேலைவாய்ப்புகள், வளர்ச்சி மற்றும் ' மேக் இன் இந்தியா' பற்றிய பேச்சுகள் வெறும் பேச்சுக்களாகவே இருக்கும்.


எல்லையை தாண்டி இந்தியா ஒரு உண்மையான உற்பத்தி மையமாக மாறுவதற்கும், சீனாவுடன் சமமாக போட்டியிடுவதற்கும் அடிமட்ட அளவில் மாற்றம் தேவை. இவ்வாறு அந்த அறிக்கையில் ராகுல் கூறியுள்ளார்.

Advertisement