ஆறு கிராமங்களில் என்.எஸ்.எஸ்., முகாம்
கோவை : கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை சார்பில், பேரூர் தாலுகா, தென்கரை, செல்லப்பகவுண்டன் புதூர், சேனாவூர், மத்திபாளையம், கரடிமைட, குப்பனூர் ஆகிய கிராமங்களில், நாட்டு நலப்பணித் திட்ட முகாம் நடைபெறவுள்ளது.
இன்று துவங்கி வரும் 26ம் தேதி வரை நடைபெறவுள்ள இச்சிறப்பு முகாமில், விழிப்புணர்வு பேரணிகள், வேளாண் தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்குப் பகிர்தல், வேளாண் தொழில்முனைவோர் நடவடிக்கைகள், கண்சிகிச்சை, கால்நடை மருத்துவம் உள்ளிட்ட மருத்துவ முகாம்கள், சுகாதார நடவடிக்கைகள், மரக்கன்று நடல், கலாசார நிகழ்ச்சிகள், சமூக மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
துவக்கவிழா, தென்கரை சிவசக்தி மண்டபத்தில் நாளை நடக்கிறது. பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், டீன்கள் வெங்கடேச பழனிசாமி, ராமலிங்கம், வெங்கடேசன், ரவிராஜ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement