தினமும் 10 பொய்களையாவது பேச பழனிசாமி சபதம்: தி.மு.க.,
சென்னை : ''ஒரு நாளைக்கு, 10 பொய்யாவது பேச வேண்டும் என, பழனிசாமி பேசி வருகிறார்,'' என, அமைச்சர் ராஜேந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் சுற்றுலா துறை அமைச்சர் ராஜேந்திரன் அளித்த பேட்டி:
எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 200 தொகுதிகளுக்கு மேல் அ.தி.மு.க., வெற்றி பெறும் என பேசி வருகிறார். ஜெயிக்க மாட்டோம் என அவருக்கு நன்கு தெரியும். ஆனாலும், அவர் வெளியே அப்படித்தான் பேசியாக வேண்டும். அதிலும் அவர் எதையும் வீம்புக்காக செய்பவர்.
தி.மு.க., ஆட்சியில் ஊழல் இல்லை. ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, வாய்க்கு வந்ததை பொய்யாகவே பேசி வருகிறார். ஒரு நாளைக்கு, 10 பொய்யாவது பேச வேண்டும் என யாரிடமோ சபதம் செய்துவிட்டு வந்து பேசுகிறார். தி.மு.க., கூட்டணி கட்சிகளுக்குள் பிரச்னை வராதா என ஏங்கித் தவிக்கும் பழனிசாமி, எத்தனை முறை யாருக்கு அழைப்பு விடுத்தாலும், அவரை நம்பி அவர் பக்கம் யாரும் செல்ல மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும்
-
ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கத்தின் செயல்பாடு அமைச்சர் ஆய்வு
-
பட்டாசு ஆலைகளுடன் கூட்டுறவு சங்கங்கள் பேச்சு
-
மாணவர்களின் பெயர் திருத்தம் தேர்வுத்துறை கட்டுப்பாடு
-
வணிகர் நல வாரிய தலைவராக வணிகரை நியமிக்குமா அரசு?
-
காமராஜரை இழிவுபடுத்திய தி.மு.க.,வுக்கு கண்டனம்
-
மாணவியர் பாதுகாப்பில் அரசு அலட்சியம்: பா.ஜ., கோபம்