மரம் நட சொல்கிறார் ராமதாஸ்

சென்னை : 'தன் பிறந்த நாளான, வரும் 25ம் தேதி, பா.ம.க.,வினர் ஒவ்வொருவரும், 10 மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்' என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:

வரும் 25ம் தேதி பசுமைத் தாயகம் நாள். இந்நாளில், பள்ளி, கல்லுாரிகள், மருத்துவமனைகள் மட்டுமல்லாது, வீடுகள், வீதிகள் தோறும், பா.ம.க.,வினர் மரக்கன்று நட வேண்டும்.

மூன்றடிக்கு மேல் வளர்ந்த, 10 மரக்கன்றுகளை நட்டு, அவை, மரங்களாகும் வரை பராமரிக்க வேண்டும். பா.ம.க.,வினர் நட்டு வைத்து வளர்த்த மரங்கள், கட்சியின் பெயரைச் சொல்ல வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement