காசாவில் 2 ஆண்டுக்கு பின் நடந்த 12ம் வகுப்பு தேர்வு

காசா:பாலஸ்தீனத்தின் காசாவில் போர் துவங்கிய 2023க்கு பின் முதன் முறையாக நேற்று 12ம் வகுப்பு தேர்வு நடைபெற்றது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஹமாஸ் பயங்கரவாதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இந்த பயங்கரவாதிகள், 2023ல் மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

இதில் இஸ்ரேல் தரப்பில், 1,200 பொது மக்கள் கொல்லப்பட்டனர். 251 பேரை பிணை கைதிகளாக பிடித்துச் சென்றனர். அவர்களிலும் நுாற்றுக்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

இதையடுத்து ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவம் முழு வீச்சில் தாக்குதலை துவங்கியது. இந்த தாக்குதலில் 95 சதவீத கல்வி வளாகங்கள் சேதமடைந்தன. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் கல்வி செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக 12ம் வகுப்பு தேர்வு நடக்கவில்லை. இதனால் மாணவர்கள் கல்லுாரி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படும் என காசா கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவித்தது. அதன்படி நேற்று நடந்த தேர்வை, 1,500 மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக வீட்டிலிருந்தபடியே எழுதினர்.

Advertisement