நைஜரில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை

நியாமே:நைஜரில் வேலைக்கு சென்ற இரு இந்தியர்கள், பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜரில், 2023 ஜூலையில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து பல்வேறு இடங்களில் வன்முறை நடக்கிறது. ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பினர் இந்த தாக்குதலில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையில், டோஸோ பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்ட இந்திய தொழிலாளர் இருவரை பயங்கரவாதிகள் சமீபத்தில் சுட்டுக் கொன்றனர்; மேலும் ஒருவரை கடத்திச் சென்றனர்.

Advertisement