ஆர்.எஸ்.எஸ்., தலைவருடன் குருமூர்த்தி ஆலோசனை

நாகர்கோவில்:கன்னியாகுமரி வந்துள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத்தை ஆடிட்டர் குருமூர்த்தி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

நான்கு நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ள மோகன் பகவத், விவேகானந்தா கேந்திராவில் தங்கி உள்ளார்.

ஆர். எஸ். எஸ்., -பா.ஜ., - ஹிந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

நேற்று முன்தினம் இரவு கன்னியாகுமரி வந்த ஆடிட்டர் குருமூர்த்தி நேற்று விவேகானந்தா கேந்திரா வளாகத்தில் மோகன் பகவத்தை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று தமிழக பா.ஜ.., தலைவர் நயினார் நாகேந்திரன் அவரை சந்திக்க உள்ளார்.

இன்று காலையில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோயிலில் மோகன் பகவத் தரிசனம் செய்கிறார். அவரது வருகையை ஒட்டி எஸ்.பி., ஸ்டாலின் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement