ஜெயப்பிரியா பள்ளி செஸ் போட்டியில் முதலிடம்

மந்தாரக்குப்பம்: கம்மாபுரம் அடுத்த கோபாலபுரம் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் பள்ளி மாணவர்கள் வட்டார அளவில் நடந்த சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்தனர்.

இருப்புகுறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் வட்டார அளவில், 11-19 வயது பிரிவு மாணவ மாணவிகளுக்கான சதுரங்கப் போட்டி நடந்தது. இதில், 50 க்கும் மேற்பட்ட பள்ளிகளில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

போட்டியில் ஜெயப்பிரியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர். இதன் மூலமாக மாவட்ட அளவிலான போட்டியில் பங்கேற்க மாணவர்கள் தகுதி பெற்றனர். போட்டியில் வென்ற மாணவர்களை ஜெயப்பிரியா வித்யாலயா பள்ளி குழும தலைவர் ஜெய்சங்கர், இயக்குநர் தினேஷ், முதல்வர் சுதர்சனா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement