போலீஸ் வேன் நம்பர் பிளேட் சர்ச்சை

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார்கொலை வழக்கில் அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்ற வேன் மடப்புரம் கோயில் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.

அந்த போலீஸ் வேனின் உட்புறம் சி.பி.ஐ., அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது டி.என். 01- ஜி 0491 என்ற நம்பர் பிளேட் கிடைத்தது. ஆனால் வேனின் முன்புறம் டி.என்.63 ஜி 0491 என்ற நம்பர் பிளேட் உள்ளது. இதில் எது உண்மையான எண் என சி.பி.ஐ., அதிகாரிகள் போலீசாரிடம் கேள்வி எழுப்பினர்.

இரு வேறு நம்பர் பிளேட் பயன்படுத்தியதற்கு காரணம் என்ன என்றும் சி.பி.ஐ., அதிகாரிகள் போலீசாரிடம் விசாரித்தனர்.

போலீஸ் வேனில் இரு வேறு நம்பர் பிளேட் இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

Advertisement