நீரில் மூழ்கி மாணவர்கள் இருவர் பலி

தேவகோட்டை:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அதி.வீதியைச் சேர்ந்த விஜயகுமார் மகன் ஹரீஸ்மாதவன் 15. அழகாபுரி நடுத்தெருவைச் சேர்ந்த சுபகான் மகன் முகமது அமீர் 15.

இருவரும் தேவகோட்டை நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 10ம் வகுப்பு படித்தனர். நேற்று பள்ளியில் காலை சிறப்பு வகுப்பு நடந்தது. அதற்கு வந்த இவர்கள் பின்னர் வீட்டுக்கு செல்லாமல், தேவகோட்டை அருகே சாத்திக்கோட்டையில் உள்ள மணிமுத்தாறு உப வடிகால்வாயில் தேங்கிய குட்டையில் இறங்கி குளித்துள்ளனர்.

அப்போது நிலை தடுமாறி ஒருவர் பின் ஒருவராக தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.

டி.எஸ்.பி., கவுதம் முன்னிலையில் தீயணைப்பு வீரர்கள் இருவர்களின் உடலையும் மீட்டனர்.

Advertisement