கரூரில் வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: வாகன ஓட்டிகளுக்கு தவிப்பு

கரூர்: கரூர் மாநகரை சுற்றி, சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சா-லைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்-சாலைகள் செல்கின்றன.

அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்-சாலை துறை சார்பில், ஊர்ப்பெயர்கள், கிலோ மீட்டர் விபரம், செல்ல வேண்டிய வழி ஆகியவை குறித்த தகவல்கள் வழிகாட்டி போர்டுகளில் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், பல சாலைகளில் வழிகாட்டி போர்டுகளை மரக்-கிளைகள் மறைத்துள்ளன. வெளி மாநில லாரி ஓட்டுநர்கள், சுற்-றுலா பஸ், வேன் மற்றும் கார் டிரைவர்கள் வழிகாட்டி போர்டுகளில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் அவதிப்படு-கின்றனர்.
குறிப்பாக, கரூர் - திருச்சி சாலை சுக்காலியூர் பகுதியில், ஊர்ப்-பெயர்கள் கொண்ட போர்டு, மரக்கிளைகள் வளர்ந்துள்ளதால் மறைந்துள்ளன.
தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகளை மறைக்காத வகையில், மரக் கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement