நடைபாதை ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள்
கரூர்: கரூர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் நகரின் முக்கிய சாலையில் உள்ள, நடைபாதையில் உள்ள, ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி அதிகா-ரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதனால், பொதுமக்கள் நடைபாதையை, பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.
கரூர் நகரின், மைய பகுதியில் செயல்படும், பஸ் ஸ்டாண்டில் மதுரை, திருச்சி மாவட்டங்களுக்கு செல்லும் பஸ் நிறுத்தப்படும் இடத்தில் இருந்த, வணிக வளாக கட்டிடம் சில மாதங்களுக்கு முன் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டும் பணி நடக்கிறது.இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டுக்கு செல்லும் பொதுமக்கள் டவுன் பஸ் மற்றும் சேலம் செல்லும் பஸ்கள் நிறுத்தும் இடத்தில் உள்ள, வணிக வளாக கட்டிட நடைபாதையில் ஒதுங்கி நிற்கின்-றனர்.
இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் நடைபாதையில் உள்ள, ஆக்கிர-மிப்புகளை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை. அதே போல், கரூர் நகரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஜவஹர் பஜார், மனோகரா கார்னர், கோவை சாலை, உழவர் சந்தை சாலை, தின்னப்பா கார்னர் சாலையில், நடைபாதையில் பல்வேறு வணிக நிறுவனங்களின் ஆக்கிரமிப்புகளையும், மாநக-ராட்சி அதிகாரி கள் அகற்றுவது இல்லை.
குறிப்பாக, முக்கிய சாலைகளின் நடைபாதையில், பல வணிக நிறுவனங்கள் சார்பில் ெஷட் மற்றும் பந்தல் அமைக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. விளம்பர போர்டுகளும், நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ளன.
அதை, கரூர் மாநகராட்சி அதிகாரிகள், அகற்றாமல் மெத்தன-மாக உள்ளனர். இதனால், கரூர் நகரில் அடிக்கடி கடும் போக்குவ-ரத்து நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களால், நடைபாதையில் நடந்து கூட செல்ல முடியவில்லை.
எனவே, கரூர் பஸ் ஸ்டாண்டில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்-புகள், நகரில் ஜவஹர் பஜார், மனோகரா கார்னர், கோவை சாலையில் உள்ள, நடைபாதையில் உள்ள, ஆக்கிரமிப்புக-ளையும், மாநகராட்சி அதிகாரிகள் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
-
தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரிங்ரோடு பாலம் பணி மந்தகதியால் வாகன ஓட்டிகள் அவதி