வாகனம் மோதி தொழிலாளி பலி

குளித்தலை: குளித்தலை அடுத்த புனவாசிப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜோதி மகன் மணிகண்டன், 37; இவர், 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர்' பைக்கில், நேற்று முன்தினம் இரவு, 9:15 மணிக்கு, அய்யர்மலைக்கு சென்றுகொண்டிருந்தார். பாலப்-பட்டி, அய்யர்மலை ரோடு புனவாசிப்பட்டி காமாட்சி அம்மன் கோவில் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரி-யாத வாகனம் மோதியது. இதில், தலை நசுங்கி சம்பவ இடத்தி-லேயே பலியானார். லாலாப்பேட்டை போலீசார் விசாரிக்கின்-றனர்.
தங்கைக்கு கொலை மிரட்டல்


அண்ணன் மீது வழக்குப்பதிவுகுளித்தலை: குளித்தலை அடுத்த கட்டளை பஞ்., நத்தமேடு பகுதியை சேர்ந்-தவர் கோவிந்தம்மாள், 57; கூலித்தொழிலாளி. இவர், திருமணம் செய்துகொள்ளாமல், தாய், தந்தையுடன் வசித்து வந்தார். கடந்த, 8ல் வீட்டில் இருந்தபோது, அதே ஊரை சேர்ந்த கோவிந்தம்-மாளின் அண்ணன் கருப்பன், இவரது மனைவி ஞானேஸ்வரி, இவர்களது மகள் ஞானசுந்தரி ஆகியோர், தகாத வார்த்தையால் பேசி, அடித்து கொலை மிரட்டல் விடுத்தனர். பாதிக்கப்பட்ட கோவிந்தம்மாள், கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார். மாயனுார் போலீசார், மூன்று பேர் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement