குடும்ப தகராறில் தாக்குதல்: போலீசார் விசாரணை

குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், தலைவாசல் பகுதியை சேர்ந்த லட்சுமி மகள் அபிராமி; அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் பெரியசாமி என்பவரை, காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது, ஒரு வயதில் மகள் உள்ளார். இந்நி-லையில், அபிராமிக்கும், அவரது கணவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த, 15ல், அபிராமி தன் தந்தைக்கு போன் செய்து, கணவரும், மாமியாரும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்துவதாக தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து அபிராமியின் உறவினர்கள் கேட்டபோது, அபிரா-மியின் கணவர் பெரியசாமி, உறவினர்கள் முருகன், 46, தமிழ்-செல்வி, 26, மணிமேகலை, 23, கன்னியம்மாள், 40, கலைய-ரசன், 19, ஆகியோர் தகாத வார்த்தையில் திட்டி, கட்டையால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பாலவி-டுதி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement