பொன்னணியாறு அணை வனப்பகுதியில் 'நெகிழி' அகற்றம்: விழிப்புணர்வு பேரணி
குளித்தலை: குளித்தலை அடுத்த கடவூர் யூனியன், பொன்னணியாறு அணை வனப்பகுதியில் நெகிழிகளை அகற்றும் பணி, விழிப்பு-ணர்வு பேரணி, கருத்தரங்கு, உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்-தது.
மாவட்ட வன அலுவலர் சண்முகம் தலைமை வகித்தார். கரூர் வனச்சரக அலுவலர் அறிவழகன், கடவூர் தாசில்தார் சவுந்திர-வள்ளி, கடவூர் தெற்கு ஒன்றிய, தி.மு.க., செயலாளர் சுதாகர், யூனியன் கமிஷனர் மங்கையர்கரசி ஆகியோர் முன்னிலை வகித்-தனர். கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ., சிவகாமசுந்தரி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.முன்னதாக, வனப்பகுதியில் நெகிழிகளை அகற்றுவது, பயன்ப-டுத்துவதை தவிர்த்தல் குறித்து விழிப்புணர்வு பேரணி நடந்தது. தொடர்ந்து, பொன்னணியாறு வனப்பகுதியில் நெகிழிகளை அகற்றும் பணி நடந்தது. இதில், 500 கிலோ, 'நெகிழி' சேகரித்து, பஞ்., நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். பின், விழிப்புணர்வு கருத்-தரங்கு நடந்தது. மாவட்ட வன அலுவலர் சண்முகம் பேசுகையில், ''நாம் அனைவரும், ''நெகிழி பொருட்களை பயன்-படுத்துவதை தவிர்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும். வீடு, வீதி, வனப்பகுதி, கோவில்களில், 'நெகிழி' இல்லாத இட-மாக பாதுகாக்க வேண்டும்,'' என்றார்.
மேலும்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை
-
தேசிய நெடுஞ்சாலை குறுக்கே ரிங்ரோடு பாலம் பணி மந்தகதியால் வாகன ஓட்டிகள் அவதி