கரூரில் சோளம் அறுவடை நிறைவு சேனை கிழங்கு சாகுபடி பணி விறுவிறு

கரூர்: அமராவதி அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பாசன பகுதிகளில் சோளம் அறுவடை நிறைவடைந்த நிலையில், சேனை கிழங்கு பயிரிடும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடு-பட்டுள்ளனர்.


திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, நெல், மஞ்சள் சாகுபடிக்காக ஆண்டு-தோறும், ஆடி மாத இறுதியில் தண்ணீர் திறப்பது வழக்கம். ஆனால், அமராவதி அணையின் நீர்மட்டம், 88 அடியாக உள்ளது. இதனால், அமராவதி ஆற்றில் முன்கூட்டியே வினாடிக்கு, 396 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.கரூர் மாவட்டத்தில், அமராவதி ஆற்றின் பாசன பகுதிகளான கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை வட்டாரங்களில் விவசாயிகள், மழையை நம்பி சோளம் பயிரிட்-டனர். தற்போது, சோளம் முற்றிய நிலையில் அறுவடை பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
விவசாயிகள் கூறியதாவது: மழையை நம்பி பயிரிடப்பட்ட சோளம் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மேலும், கேரளா உள்ளிட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால் அமராவதி அணையின் நீர்மட்டம், 90 அடியை விரைவில் எட்டி விடும். அப்போது, பாசனத்துக்காக அமராவதி ஆற்றில் இருந்து, கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படும்.
சேனை கிழங்கு சாகுபடிக்காக, சோளம் அறுவடையை தீவிரப்ப-டுத்தியுள்ளோம். சில விவசாயிகள் மஞ்சள் பயிரிடுடன், சேனை கிழங்கை ஊடு பயிராகவும் சாகுபடி செய்வர்.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement