பிடிவாரன்ட்: வாலிபர் சிக்கினார்

கெங்கவல்லி: கெங்கவல்லி போலீசார், நடுவலுார், பள்ளக்காட்டில், 2018 ஜூன், 20ல் நடந்த அடிதடி தொடர்பாக, இருதரப்பினர் மீது வழக்-குப்பதிந்தனர். ஆத்துார் இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்-றத்தில், விசாரணை நடக்கிறது.

இதில் மணி, 41, என்பவர் ஆஜரா-காமல் இருந்தார். அவருக்கு, கடந்த ஜூன், 27ல், நீதிமன்றம் பிடி-வாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் நேற்று, பள்ளக்காட்டில் உள்ள வீட்டுக்கு வந்த அவரை, கெங்கவல்லி போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Advertisement