தடயவியல் தடுப்பு சட்டம் மாவட்ட நீதிபதி விளக்கம்
சேலம்: சேலம் அரசு மருத்துவமனையில், தடயவியல் மருத்துவம், நச்சு-யியல் துறை மற்றும் மருத்துவ கல்வி பிரிவு இணைந்து, 'தடய-வியல் தடுப்பு சட்டம் - 2025' குறித்து, 'மருத்துவ கல்வியில் புதுப்பிப்புகள் மற்றும் நேரத்தின் தேவை - 2.0' எனும் பயிற்சி பட்டறை, கருத்தரங்கை நேற்று நடத்தின. சேலம் எஸ்.பி., கவு-தம் கோயல் தொடங்கி வைத்தார்.
சேலம் கூடுதல் மாவட்ட நீதிபதி புகழேந்தி, தடயவியல் தடுப்பு சட்டம் குறித்து பல்வேறு விளக்கங்கள், அறிவுரைகளை வழங்-கினார். தொடர்ந்து கருத்தரங்கில், மதுரை, திருச்சி, விருதுநகர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து அரசு, தனியார் மருத்துவ கல்லுாரி பேராசிரியர்கள், பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் பல்வேறு போட்டி
களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சேலம் அரசு மருத்துவமனை டீன் தேவி மீனாள், அரசு மருத்துவ கல்லுாரி துணை முதல்வர் செந்தில்குமாரி உள்பட பலர் பங்கேற்-றனர். ஏற்பாடுகளை தடயவியல்
மருத்துவ துறை தலைவர் கோகுலரமணன், ஒருங்கிணைப்பாளர் அன்புசுந்தர் உள்ளிட்ட பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை