பீடி, கஞ்சா, மொபைல் போன்களை பந்தாக மாற்றி சிறைக்குள் வீசியது யார்?



சேலம்: சேலம் மத்திய சிறை, 16வது பிளாக்கில், நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, 'டேப்' சுற்றப்பட்ட பந்து போன்ற, 6 உருண்-டைகள் கிடந்தன.


சிறை வெளியே பின்புறம் இருந்து யாரோ வீசியது தெரிந்தது. அப்போது பணியில் இருந்த
சிறை காவலர் தமிழ்செல்வன், 6 உருண்டைகளையும் எடுத்துச்சென்று, சிறை அலுவலர்களிடம் ஒப்படைத்தார். பிரித்து பார்த்த போது, 500 பீடிகள், 700 கிராம் கஞ்சா, 4 பாக்கெட் சிகரெட், 2 மொபைல் போன், 4 சார்ஜர், கஞ்சா பயன்படுத்துவதற்கான பேப்பர் ரோல் ஆகியவை இருந்-ததால் அதிர்ச்சி அடைந்தனர். பின் சிறை அலுவலர் குமார்(பொ) புகார்படி, அஸ்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் சிறை பின்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமராவில் மர்ம நபர்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளதா என, ஆய்வு செய்தனர்.

Advertisement