சரக ஹாக்கி போட்டி மாணவர்களுக்கு பாராட்டு

அரூர்: அரூர் சரக அளவிலான ஹாக்கி மற்றும் சதுரங்க போட்டிகள், நரிப்பள்ளி மற்றும் கீரைப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்தது. ஹாக்கி ஜூனியர் பிரிவில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதலிடத்தையும், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் பிரிவில் இரண்டாமிடத்தையும் பிடித்-தனர்.


சதுரங்க போட்டியில் பிளஸ் 2 மாணவன் தர்ஷன் இரண்டாமிடம் பெற்றார். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களையும் அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனி-துரை, முருகேசன், வெங்கடாசலம் ஆகியோரை, பள்ளி தலை-மையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Advertisement