வனத்தில் பிளாஸ்டிக் குப்பை அகற்றிய கல்லுாரி மாணவர்கள்

அரூர்: அரூர் வனப்பகுதியில் குவிந்திருந்த பிளாஸ்டிக் குப்பையை, நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் அகற்றி துாய்மை பணி மேற்கொண்டனர்.


தர்மபுரி மாவட்டம், அரூர் நான்குரோட்டில் இருந்து, கடத்துார் செல்லும் சாலையில், அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இங்கு வரும், குடிமகன்கள் மது வாங்கிக் கொண்டு அருகேவுள்ள வனப்-பகுதிக்கு சென்று, மது அருந்துகின்றனர். பின், அங்கேயே பாட்டில், பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட், பாலிதீன் பை உள்ளிட்டவைகளை வீசிச் செல்வதால், பிளாஸ்டிக் குப்பை குவிந்துள்ளது. மேலும், அரூர் நகரில் உள்ள இறைச்சிக் கடை-களில் இருந்து, சாக்கு பைகளில் கொண்டு வரப்படும் கோழிக்க-ழிவுகள் உள்ளிட்டவைகள் கொட்டப்படுவதால், துர்நாற்றம் வீசு-கிறது. இந்நிலையில் வனப்பகுதியில் தேங்கியிருந்த பிளாஸ்டிக் குப்-பையை, அரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர், மொரப்பூர் வனத்துறை-யினர் மற்றும் அரூர் டவுன் பஞ்., பணியாளர்கள் இணைந்து, நேற்று பிளாஸ்டிக் குப்பையை அகற்றி துாய்மை பணி மேற்-கொண்டனர். இதை, அரூர் அரசு கல்லுாரியின் நாட்டு நலப்-பணி திட்ட அலுவலர் கோபிநாத் மற்றும் விவேகானந்தன் ஆகியோர்
ஒருங்கிணைத்தனர்.

Advertisement