மக்காச்சோளம் விலை சரிவு அரூர் விவசாயிகள் கவலை

அரூர்: அரூர் பகுதியில் மக்காச்சோளம் விலை சரிந்துள்ளதால் விவசா-யிகள் கவலை அடைந்துள்ளனர்.
தர்மபுரி மாவட்டத்தில், கடந்தாண்டு, மக்காச்சோளத்துக்கு, குவிண்டாலுக்கு, 2,700 முதல், 2,900 ரூபாய் வரை விலை கிடைத்தது. இதனால் நடப்பாண்டு, அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் சுற்றுவட்டாரத்தில், 12,000க்கும் மேற்பட்ட ஏக்-கரில் விவசாயிகள் மக்காச்சோளத்தை ஆர்வத்துடன் சாகு-படி செய்தனர்.
தற்போது, மக்காச்சோளம் அறுவடை பணி நடக்கிறது. மக்காச்-சோளம் விலை சரிவால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இது குறித்து, பா.ஜ., மாநில
விவசாய அணி செயற்குழு உறுப்பினர் குழந்தை ரவி கூறியதா-வது:
நிலத்தை உழவு செய்தல், விதை, நடவு, உரம், பூச்சிக்கொல்லி மருந்து, களை எடுத்தல், அறுவடை செலவு என, ஒரு ஏக்கர் மக்-காச்சோளம் சாகுபடி செய்ய, 30,000 ரூபாய் வரை செலாகிறது. ஏக்கருக்கு, 25 முதல், 30 குவிண்டால் வரை மக்காச்சோளம் மகசூல் கிடைக்கிறது.
கடந்தாண்டு, ஒரு குவிண்டால், 2,900க்கு ரூபாய்க்கு விற்ப-னையான நிலையில், தற்போது, ஒரு குவிண்டால் மக்காச்-சோளம், 2,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
எனவே, விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மக்காச்சோ-ளத்திற்கு சரியான விலை நிர்ணயம் செய்வதுடன், மக்காச்-சோளத்தை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement