சிறப்பு பயிற்றுனர் சங்கத்தினர் தமிழக முதல்வருக்கு கடிதம்

தர்மபுரி: தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தினர், கோரிக்-கைகளை வலியுறுத்தி நேற்று, தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பினர்.
அதில், அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு பள்ளி கல்வித்
துறையில், ஒருங்கிணைந்த பள்ளி திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வரை, 1.12 லட்சம் மாற்றுத்திறன் மாணவர்கள் படிக்கின்றனர். அவர்க-ளுக்கு கல்வி அளிக்க, சிறப்பு கல்வியியல் பட்டம் மற்றும் பட்-டயம் படித்த, 1,600 சிறப்பு பயிற்றுனர்கள் வழியாக, பயிற்சி வழங்கப்படு
கிறது. தற்போது, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தில் பணி-புரிந்து வரும், அனைத்து தொகுப்பு பூதிய பணியாளர்களுக்கும், 5 சதவீதம் ஊதிய உயர்வு வழங்க வேண்டும். கல்வி சிறப்பு பயிற்-றுனர்கள், சிறப்பு பயிற்சி மையம் பராமரிப்பாளர், உதவியாளர்க-ளுக்கு, 7,000 ரூபாய் வரை ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.
பள்ளி கல்வித்துறை அமைச்சர் மற்றும் ஆணையர் இருவரும், சிறப்பு பயிற்றுனர்களுக்கு பணி ஆணை வழங்க ஆணையிட்டும், ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் வழங்க மறுத்து வருகிறது. பணியாணை வழங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். பணியில் இணைந்துள்ள நாள் முதல், தொழிலாளர் வைப்பு நிதி வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட, 5 அம்ச கோரிக்கைகளை நிறை-வேற்ற வேண்டும்.
இவ்வாறு, அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Advertisement