சம்பளமின்றி வேலை; விலகும் பயிற்றுநர்கள் 'ஹைடெக்' ஆய்வகங்களால் திண்டாடும் ஆசிரியர்கள்

கோவை: மத்திய அரசின் நிதிஉதவியுடன், தமிழக அரசு பள்ளிகளில் அமைக்கப்பட்ட, 'ஹைடெக்' ஆய்வகங்கள், பயிற்றுனர் பற்றாக்குறையால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
அதிக பணிச்சுமை
தமிழகத்தில், 6,000க்கும் மேற்பட்ட அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 'ஹைடெக்' ஆய்வகங்கள் தலா, 6.04 லட்சம் ரூபாய் செலவில் நிறுவப்பட்டுள்ளன.
நடுநிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆய்வகங்களில் 10, மேல்நிலைப்பள்ளி ஆய்வகங்களில், 20 கம்ப்யூட்டர்கள் உள்ளன.
இந்த ஆய்வகங்களை நிறுவுவதில் இருந்து தேவையான கம்ப்யூட்டர்கள், புரொஜக்டர்கள் உள்ளிட்ட உபகரணங்களை வழங்குவது மற்றும் பயிற்றுநர்களை நியமிப்பது உள்ளிட்ட பணிகள், 'கெல்ட்ரான்' என்ற நிறுவனத்திடம் தமிழக அரசு ஒப்படைத்தது.
பல பள்ளிகளில் ஹைடெக் ஆய்வக பயிற்றுநர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அதிக பணிச்சுமை, சரியாக ஊதியம் வழங்காதது உள்ளிட்ட காரணங்களால், பயிற்றுநர்கள் பணியில் தொடர ஆர்வம் காட்டவில்லை.
இதனால், ஆய்வகங்களை பயன்படுத்த முடியாமல் தலைமையாசிரியர்கள் உள்ளனர்.
ஆய்வக பயிற்றுநர்கள் கூறியதாவது:
கடந்த, 2024ல் தேர்வு நடைபெற்று கவுன்சிலிங் வாயிலாக பணியில் சேர்ந்தோம். 11 மாதங்களுக்கு ஒப்பந்தப்படி, மாதம், 11,400 ரூபாய் சம்பளம்; பிடித்தம் போக, 9,700 ரூபாய் வழங்கப்பட வேண்டும்.
நிறைய சிக்கல்
ஒவ்வொரு மாதமும், 7ம் தேதி சம்பளம் வழங்க வேண்டும்.
ஆனால், மாத இறுதியில் சம்பளம் வழங்கப்படுகிறது. சில இடங்களில் இரண்டு மாதம் கூட சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் பயிற்றுநர், இரண்டு ஆரம்பப்பள்ளிகளை சேர்த்து கவனிக்க வேண்டும். ஸ்மார்ட் போர்டு, எமிஸ் உள்ளிட்ட பணிகளையும் கவனிக்க வேண்டும்.
ஒரு பள்ளியில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்துக் கொண்டிருக்கும் நேரத்தில், மற்றொரு பள்ளியில் இருந்து அழைப்பு வரும். இதனால், நிறைய சிக்கல்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலை அனைத்து இடங்களிலும் தொடர்கிறது. எங்களுக்கு பயிற்சிகளும் முறையாக வழங்கப்படவில்லை.
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளரிடம் பலமுறை புகார் அளித்தாலும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.



மேலும்
-
என் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறேன்; தேசமே முதன்மையானது என்கிறார் காங்., எம்.பி., சசி தரூர்
-
அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி; சிகிச்சையில் இருந்த மனைவியை கொலை செய்த கணவன்!
-
மீண்டும் நிரம்பியது மேட்டூர் அணை; வினாடிக்கு 31 ஆயிரம் கன அடி உபரிநீர் வெளியேற்றம்
-
அட்லாண்டா சென்ற விமானம் தீப்பற்றி எரிந்தது; லாஸ் ஏஞ்சல்சில் அவசர தரையிறக்கம்
-
பேசிப் பழகிய பொய்; வாங்கிப் பழகிய கை; போட்டுப் பழகிய பை!
-
அரசு பஸ்சில் கும்மிருட்டு பயணியர் படு அவஸ்தை